வேளாண் பல்கலை. முதுநிலை மாணவர் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பம்

வேளாண் பல்கலை. முதுநிலை மாணவர் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பம் 
 
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு புதன்கிழமை (செப். 8) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 35 துறைகளில் முதுநிலை பட்டப்படிப்புகளும், 30 துறைகளில் முனைவர் பட்டப்படிப்புகளும் நடத்தப்படுகின்றன. வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கோவை, மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையம் ஆகிய கல்லூரிகளில் இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. 
 
 இந்நிலையில் இந்த கல்லூரிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக நடைபெறுகிறது. அதேபோல் நுழைவுத் தேர்வும் இணையவழியிலேயே நடைபெறும். முதுநிலை மாணவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையும், முனைவர் பட்ட மாணவர்கள் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலும் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். 
 
முதுநிலை மாணவர்களுக்கு அக்டோபர் 26 ஆம் தேதியும், முனைவர் பட்ட மாணவர்களுக்கு டிசம்பர் 24 ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறும். மாணவர்கள் முதுநிலை, முனைவர் பட்ட படிப்புகளுக்கான விவரங்களை https://admissionsatpgschool.tnau.ac.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...!

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட நடவடிக்கை -கலெக்டர் ஸ்ரீதர்

1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது உறுதி முழு நாளும் வகுப்புகள் உண்டு: கல்வி அமைச்சர் அவர்கள்