தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...! தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று (21.11.2022) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (22.11.2022) வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். (23.11.2022) முதல் (24.11.2022) வரை வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும...
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட நடவடிக்கை -கலெக்டர் ஸ்ரீதர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர்கள், செல்போன்கள், அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான 359 மனுக்களை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 500 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 5 பேருக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட...
Comments
Post a Comment